வண்மயமாக மாறிய சுண்ணாகம்!!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் எண்ணக்கருவிற்கு அமைவாக, நகரை அழகுபடுத்தும் திட்டத்தின் கீழ், யாழ்ப்பாணம் சுன்னாகம் நகரத்தை அழகுபடுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

சுன்னாகம் இளைஞர்கள் மற்றும் அளவெட்டி இளைஞர்கள் இணைந்து, இன்றையதினம் வண்ணமயமான சுவர் ஓவியங்கள் வரையும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்திற்கு அருகிலும், நவீன சந்தைக் கட்டிடத் தொகுதி பகுதிகளிலும், கடந்த வாரங்களில், யாழ். மாவட்ட இளைஞர் அமைப்புகள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் இணைந்து, சுவர் ஓவியங்களை வரைந்தனர்.

இந்த சுவரோவியங்கள் மக்கள் மத்தியில் பெரிதும் கவரப்பட்டது.

இந்த நிலையில், சுன்னாகம் மத்திய பேரூந்து நிலையம் மற்றும் பொதுச் சந்தைக் கட்டிடத் தொகுதிகளில், சுவர் ஓவியங்கள் வரையும் நடவடிக்கைகளை, இளைஞர்கள் முன்னெடுத்துள்ளனர்.

இந்த ஓவியங்கள், யாழ்ப்பாணத்தை பிரதிபலிக்கக் கூடிய ஓவியங்களாகவும், சிந்தனையைத் தூண்டக்கூடிய ஓவியங்களாகவும் காணப்படுகின்றமை சிறப்பம்சமாகும்.(சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!