த.தே. கூட்டமைப்பின் வாக்கு வங்கி சரிந்துவிட்டது – பிரபா கணேசன்!!

முன்னாள் அமைச்சர் மனோ கணேசனுக்கும், தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கும் இடையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக, முன்னாள் பிரதியமைச்சர் பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்.

இன்று, வவுனியா சாம்பல் தோட்டம் பகுதியில், பாடசாலை மாணவர்களுக்கு, ஒரு தொகுதி பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

தீப ஒளி அறக்கட்டளையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற நிகழ்வில், பிரதம அதிதியாக கலந்துகொண்டு, உதவிகளை வழங்கி வைத்தார்.

இதன் போது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு வடக்கு கிழக்கு உட்பட ஏனைய மாவட்டங்களிலும் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக மாவை சேனாதிராஜா அண்மையில் தெரிவித்த கருத்தானது தவறான கருத்தாக தெரியவில்லை.

இலங்கையில் உள்ள எந்த அரசியல் கட்சியும் இலங்கையில் உள்ள எந்த மாவட்டதடதிலும் தேர்தலில் போட்டியிடுவதற்கு அரசியல் யாப்பின் அடிப்படையில் உரிமையுண்டு.

அத்தோடு வடக்கு கிழக்கை பொறுத்த வரைiயில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வாக்கு வங்கியில் சரிவு ஏற்பட்டுள்ளது.

இதனை ஈடு செய்வதோடு தேசிய பட்டியலிலே வாக்குகளை பெற்றுக்கொள்வதற்காக இவர்கள் ஏனைய மாவட்டங்களிலும் போட்டியிட தீர்மாணித்துள்ளனர்.

அத்தோடு மனோகணேசன் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு இடையில் ஏற்கனவே ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.

தெற்கு பகுதியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தேர்தலில் போட்டியிடக்கூடாது என்றும், அதே போன்று வடக்கில் மனோகணேசன் போட்டியிட மாட்டார் என்றும்.

இருந்தும் மனோகணேசன் அமைச்சராக இருந்த காலப்பகுதியில் வடக்கு கிழக்கில் தனது வேலைத்திட்டங்களை மேற்கொண்டமையால் மனோகணேசன் வடக்கு கிழ்கில் போட்டியிட்டுவிடுவார் என்ற எண்ணத்தில் தாங்களும் தெற்கில் தேர்தலில் போட்டியிடுவோம் என்ற கருத்தை மனோகணேசனிற்கு தெரியப்படுத்தியிருக்கிறார்கள். என தெரிவித்துள்ளார்.(சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!