சலுகைகளை இடைநிறுத்துபவர்களுக்கு எதிராக நடவடிக்கை : சந்திரசேன

கடந்த அரசாங்கத்தை பாதுகாத்த மக்கள் விடுதலை முன்னணி, இன்று புதிய அரசாங்கம் தொடர்பில் கருத்துக்களை முன்வைப்பதாக, சுற்றாடல், வனஜீவராசிகள், காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார்.

 

அனுராதபுரத்தில் இக்கருத்தை வெளியிட்டார்.

பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டிருக்கின்றன.

இந்த விலைக்குறைப்பு கீழ் மட்டங்களுக்கு செல்லவில்லை என்ற தகவல் தொலைபேசி ஊடாக கிடைத்திருக்கின்றது.

அதனை எமது தலைவர்கள் தெரிந்து கொண்டுள்ளார்கள்.

இது தொடர்பில் எதிர்வரும் அமைச்சரவைக் கூட்டத்தில் கலுந்துரையாடுவதற்கு தீர்மானித்து இருக்கின்றோம்.

மக்களுக்கு வழங்கிய சலுகைகளை இடையில் யாராவது தடுத்து நிற்பார்களே ஆனால், அதற்கான தண்டணை கொடுக்க வேண்டியது அவசியம்.

மக்கள் விடுதலை முன்னணி, முன்னைய அரசாங்கத்தின் காலத்தில் பொருட்களின் விலை குறைப்பு தொடர்பில் பேசாது, அந்த அரசாங்கத்தினை பாதுகாத்துக் கொண்டு இருந்தது.

நாங்கள் தற்போது சலுகைகளை வழங்கும்போது சிறு சிறு விடயங்களை ஊதிப் பெரிதாக்கிக் கொண்டு இருக்கின்றார்கள்.

மக்கள் விடுதலை முன்னணி தொடர்பில் எடுக்க வேண்டிய தீர்மானத்தினை கடந்த தேர்தலில் மக்கள் எடுத்துவிட்டார்கள்.

நாட்டை ஆட்சி செய்வதனையும் பொருட்களின் விலைகளை குறைப்பதற்கும் மக்கள் விடுதலை முன்னணி எமக்கு சொல்லித் தர தேவை இல்லை.

அரசாங்கம் என்ற வகையில் செய்ய வேண்டியதை நாம் செய்வோம் என்பதை சொல்லி வைக்க விரும்புகின்றேன். என குறிப்பிட்டுள்ளார். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!