புதிய அரசாங்கத்தின் நல்ல செயற்பாடுகளுக்கு ஆதரவு வழங்குவதுடன், மக்களின் பலமான எதிர்க்காட்சியாக செயற்பட்டு, சேவையாற்ற தயார் என, ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நேற்று, அனுராதபுரம் கெக்கிராவ பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வில் இவ்வாறு குறிப்பிட்டார்.
அரசியல் பழிவாங்கும் செயற்பாடு இன்று பாரிய அளவில் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது.
தற்போது அரசியல் பழிவாங்கலுக்கு உள்ளாகிய, உள்ளாகின்ற அனைவருக்காவும் குரல் கொடுப்பதுடன், அவர்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளுவோம் என்பதை நான் தெளிவாக சொல்லிக் கொள்ள விரும்புகின்றே;ன.
கட்சியின் பொறுப்பில் இருந்து கொண்டு நான் நினைப்பது சரியானது என்பதை கட்சியின் கொள்கையாக செற்படுத்தப்படுகின்றது.
கட்சியின் கொள்கை மக்கள் எதிர்பார்ப்பதாக அமைய வேண்டும்.
நல்ல விடயங்களை செய்வதற்கும் நல்ல திட்டங்களை தயார் செய்வதற்கும் அரசாங்க பலம் தேவை அற்றது.
பலமான மக்களின் எதிர்கட்சியாக நாட்டில் செயற்பட்டு சிறந்த சேவையினை ஆற்ற முடியும்.
அதன் ஊடாக எமது நாட்டினை முன்னேற்றம் அடைய செய்ய முடியும்.
நாம் எதிர்க்கட்சியினர் என்ற வகையில் அரசாங்கம் செய்கின்ற நல்ல செயல்களுக்கு ஆதரவினை வழங்கும் அதேநேரம், அரசாங்கத்தில் செய்யும் பிழைகளை அவர்களின் குறைகளை சுட்டிகாட்டி, அந்த பிழைகளை திருத்தச் செய்யும் எதிர்கட்சியாக நாம் செயற்பட வேண்டும். என குறிப்பிட்டுள்ளார். (சி)