தொழில் பயிற்சி அதிகார சபையின், கிளிநொச்சி தொழில் பயிற்சி நிறுவனத்தின் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப மாணவர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு, இன்று நடைபெற்றது.
விருந்தினர்கள் வரவேற்கப்பட்டதை அடுத்து, தேசிய கொடி ஏற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின.
இன்று, கிளிநொச்சி கூட்டுறவு சபை கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில், முதன்மை விருந்தினராக, கடற்தொழில் நீரியல் வளங்கள் மூலங்கள் அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துகொண்டார்.
நிகழ்வில், கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், தொழில் பயிற்சி அதிகார சபை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதன் போது, கல்வி கற்ற மாணவர்கள் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். (சி)