அட்டாளைச்சேனையில் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு!!

அடபின்தங்கிய பிரதேசமான அட்டாளைச்சேனை தைக்காநகர் ஸஹ்றா வித்தியாலய மாணவர்களுக்கு எவடொப் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் கற்றல் உபகரணங்கள் வழங்கும் ‘கல்விக்கு கை கொடுப்போம்’ நிகழ்வு நேற்று பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது.

எவடொப் விளையாட்டுக் கழகத்தின் தலைவரும் தேசிய காங்கிரஸ் கட்சியின் அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினருமான ஏ.எல்.அஜ்மல் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அக்கறைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தின் உதவிக்கல்விப் பணிப்பாளர் எம்.எல்.எம்.லாபீர் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

கௌரவ அதிதிகளாக வித்தியாலய அதிபர் எம்.எஸ்.எம்.பைறூஸ், தென்கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர்களான ரீ.பாத்திமா சஜீதா, ஏ.ஜே.சாபனி, சட்டத்தரணிகளான பாத்திமா ஹூஸ்னா, பாத்திமா ஆயிசா பேகம், டாக்டர் எம்.ஏ.சுஹைல் அஹமட், லப்ரி ஹூசைன் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

இங்கு வருமானம் குறைந்த குடும்பங்களை சேர்ந்த 150 பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டன.

அட்டாளைச்சேனை தைக்கா நகர் எவடொப் விளையாட்டுக் கழகம் கடந்த 25 வருடங்களாக விளையாட்டுத்துறை மட்டுமல்லாது பல்வேறு சமூகப்பணிகளையும் இப்பிரதேசத்தில் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!