அம்பாறையில், இனங்களிடையே புரிந்துணர்வை ஏற்படுதும் விழிப்புணர்வு செயலமர்வு!!

இனங்களிடையே புரிந்துணர்வை ஏற்படுத்தும் முயற்சியினை இலங்கை தேசிய சமாதான பேரவை முன்னெடுத்து வருகின்றது.

இதற்கமைவாக அம்பாறை மாவட்ட அட்டாளைச்சேனை சர்வமத குழு மற்றும் அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவும் இணைந்து ஏற்பாடு செய்த சமூக நல்லிணக்கத்தில் சமூக ஊடகங்களின் வகிபாகம் எனும் தொனிப்பொருளிலான விழிப்புணர்வு செயலமர்வு அக்கரைப்பற்று மாநகர சபை நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

தேசிய சமாதான பேரவையின் சிரேஸ்ட செயற்றிட்ட உத்தியோகத்தர் மதனி உவைஸ்; தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப்பணிப்பாளர் எம்.ஏ.எம்.றியாஸ் மற்றும் தேசிய சமதான பேரவையின் அட்டாளைச்சேனை சர்வமத குழு இணைப்பாளர் எம்.யு.உவைஸ் ஆலையடிவேம்பு சர்வமத குழு இணைப்பாளர் த.கயிலாயபி;ள்ளை உள்ளிட்ட சர்வமத குழக்களின் உறுப்பினர்கள் மதத்தலைவர்கள் பொலிசார் சர்வமத இளைஞர் யுவதிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

மத நல்லிணக்கமும் அதில் சமூக ஊடகங்களின் வகிபாகமும் எனும் பொருள்பட ஆரம்பமான இச்செயலமர்வினை அட்டாளைச்சேனை சர்வ மத குழு இணைப்பாளர் எம்.யு.உவைஸ் ஆரம்பித்து வைத்து உரையாற்றினார்.

தொடர்ந்து ஆலையடிவேம்பு சர்வமத குழு இணைப்பாளர் த.கயிலாயபிள்ளை சமூக நல்லிணக்கத்தின் அவசியம் பற்றியும் அதில் இளைஞர் யுவதிகளின் பங்களிப்பு பற்றியும் உரையாற்றினர்.

இதேநேரம் செயலமர்வின் நோக்கம் எதிர்பார்ப்பு தொடர்பில் தேசிய சமாதான பேரவையின் சிரேஸ்ட செயற்றிட்ட உத்தியோகத்தர் மதனி உவைஸ்; விளக்கினார்.
நிகழ்வில்; மதநல்லிணக்கத்தில் இளைஞர் யுவதிகளின் பங்கு மற்றும் தலைமைத்துவம் தொடர்பான கருத்துக்களும் பரிமாறப்பட்டன. (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!