மன்னாரில் நாவலர் விழா சிறப்பாக இடம் பெற்றது

மன்னார் மாவட்ட அறநெறிப் பாடசாலைகளின் இணையத்தின் ஏற்பாட்டில் நாவலர் விழா இன்று மன்னார் சித்திவிநாயகர் இந்துக் கல்லூரியில் இடம்பெற்றது.

மன்னார் மாவட்ட அறநெறிப் பாடசாலைகளின் இணையத்தின் தலைவர் மஹா தர்மகுமார குருக்கள் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் விருந்தினர்களாக முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி விக்னேஸ்வரி பவனேசன், மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது பாடசாலை முன்றலில் இருந்த நாவலர் சிலைக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டதை அடுத்து, விருந்தினர்கள் அழைத்துச் செல்லப்பட்டு நிகழ்வுகள் இடம்பெற்றன.

இதன்போது பல்வேறு நிகழ்வுகள் இடம் பெற்றதோடு, துறைசார் விருதுகளும் வழங்கி வைக்கப்பட்டன.

இதன்போது கலந்து கொண்ட விருந்தினர்கள், தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவித்தனர்.

இந்நிகழ்வில் அறநெறிப் பாடசாலை மாணவர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள், திணைக்கள பிரதி நிதிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!