நாடளாவிய ரீதியில் கடற்கரையோரங்களை துப்பரவு செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன

ஜனாதிபதியின் சிந்தனைக்கு அமைவாக நாட்டை அழகுபடுத்தும் வேலைத்திட்டங்கள் தேசிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைவாக கரையோரப் பகுதிகளை அழகுபடுத்தும் வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதன்கீழ் இலங்கை இராணுவத்தின் ஒத்துழைப்புடன் நாடளாவிய ரீதியில் கடற்கரையோரங்களை துப்பரவு செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதற்கு அமைய கிழக்கு மாகாண இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ரசிக பெர்னாண்டோ வழிகாட்டலின் கீழ் கடற்கரையோரங்களை துப்பரவு செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மட்டக்களப்பு 10ஆவது கஜபா ரெஜிமென்ட் படைப்பிரிவு இராணுவ அதிகாரி மேஜர் சுதீர் அபேநாயக்க தலைமையில் மட்டக்களப்பு கல்லடி டச்பார் கடற்கரை பகுதியினை துப்பரவு செய்யும் பணிகள் இன்று முன்னெடுக்கப்பட்டன.

இன்று ஆரம்பித்து வைக்கப்பட்ட கடற்கரை பகுதியினை துப்பரவு செய்யும் பணியில் மட்டக்களப்பு கல்லடி 231 இராணுவ கட்டளைப் பிரிவு அதிகாரிகள், புனானை 23வது இராணுவ கட்டளைப் பிரிவு அதிகாரிகள், மட்டக்களப்பு 10 வது கஜபா ரெஜிமென்ட் படைப்பிரிவு இராணுவ அதிகாரிகள், மட்டக்களப்பு மாநகர சபை சுகாதார குழுத் தலைவர் சிவம்பாக்கியநாதன் தலைமையிலான மாநகரசபை ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!