அம்பலாங்கொடை கடற்பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட ஏழு பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையால் கடல் வளங்கள் அழிவடைவதை தடுக்கும் நோக்கில் மீன்வள மற்றும் நீரியல்வளத் திணைக்களத்துடன் இணைந்து கடற்படையினர் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது விளக்குகள் மூலம் சட்டவிரோதமாக மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த 04 மீன்பிடி படகுகளுடன் ஏழு மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனை அடுத்து, 07 மீனவர்களும் கடற்படை காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, நான்கு மீன்பிடிப் படகுகள், நான்கு வெளி இணைப்பு இயந்திரங்கள், நான்கு எல்.ஈ.டி மின்குமிழ்கள், மற்றும் 13 மின்கலங்கள் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளன.