ராஜித சேனாரட்ன அரசியல் பழிவாங்கலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் : சரத்பொன்சேகா எம்.பி

நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரட்ன அரசியல் பழிவாங்கலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்சல் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த சரத்பொன்சேகா,

இதுதான் ராஜபக்ஷக்களின் அரசியல் கலாசாரமாக இருந்து வருகிறது.

இவர்களை பற்றி நாம் நன்றாக அறிவோம்.

இதனை நாம் ஆரம்பத்தில் இருந்தே மக்களிடம் கூறி வந்தோம்.

எனினும் மக்கள் இதனை ஏற்றுக்கொள்ளாமல், மீண்டும் அவர்களுக்கு அதிகாரத்தை வழங்கியுள்ளார்கள்.

இது வெறும் ஆரம்பம் மட்டும்தான்.

இன்னும் ஒரு வருடம் சென்ற பின்னர், மக்கள் தாங்கள் செய்த பிழைகளை உணரும் அளவுக்கு அவர்கள் செயற்படுவார்கள்.

இதேவேளை, இன்று ஐக்கிய தேசியக் கட்சியில் பல்வேறு பிரச்சினைகள் இருக்கின்றன.

கட்சி மறுசீரமைப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

கட்சியின் பொறுப்புக்களுக்கு புதியவர்கள் வரவேண்டும்.

இது நடைபெறாவிட்டால், நிச்சயமாக மக்கள் இந்தக் கட்சியை மறந்து விடுவார்கள்.

எனவே, காலத்தின் தேவையை உணர்ந்து உரிய நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டும்.

அந்தவகையில், சஜித் பிரேமதாசவுக்கு தலைமைப் பதவியை வழங்கினால் கூட அது பிழையில்லை என்பதுதான் எமது நிலைப்பாடாக இருக்கிறது.

என்று கூறினார்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!