இந்திய மீனவர்கள் 14 பேர் நெடுந்தீவு கடற்பரப்பில் கைது

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி உள்நுழைந்த இந்திய மீனவர்கள் 14 பேர் நெடுந்தீவுக் கடற்பரப்பில் கைது செய்யப்பட்டு காங்கேசன்துறைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இந்தியாவின் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தில் இருந்து நேற்றுக் காலை மீன் பிடிக்க புறப்பட்ட மீனவர்களே இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்ட நிலையில் மருத்துவ பரிசோதனைகளின் பின்னர், சட்ட நடவடிக்கைகளுக்காக மாவட்ட நீரியல் வளத்துறைத் திணைக்கள அதிகாரிகளிடம் கையளிக்கப்படவுள்ளனர்.

நீண்டகாலமாக இந்தியப் படகுகள் கைது செய்யப்படாதபோதும் மூன்று தினங்களிற்கு முன்னர் ஓர் இந்தியப் படகு நெடுந்தீவில் கரையொதுங்கிய நிலையில் கடலில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டதை அடுத்து இக் கைது இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!