பாடசாலை மாணவர்களுக்கான சீருடை, வவுச்சர் மற்றும் பாடப் புத்தகங்களை விநியோகிக்கும் நடவடிக்கைகள் ஜனவரி மாதம் 3 ஆம் திகதி நிறைவு செய்யப்படும் கல்விச் சேவைகள் இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
வலய மட்டத்தின் அடிப்படையில் பாடப் புத்தக்கங்கள் தற்சமயம் விநியோகிக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.