எட்­டா­வது பாரா­ளு­மன்­றத்தின் 4 ஆவது அமர்வில் சஜித் எதிர்க்­கட்சித் தலை­வ­ர்

எட்­டா­வது பாரா­ளு­மன்­றத்தின் 4 ஆவது அமர்வு ஜன­வரி 3 ஆம் திகதி வெள்­ளிக்­கி­ழமை நடைபெறவுள்ளது.

இந்த அமர்வில் ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­ப­க் ஷவின் அர­சாங்க கொள்கை பிர­க­டனம் இடம்­பெ­ற­வுள்­ளது.

ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­ப­க்ஸவின் கொள்கை பிர­க­ட­னத்­தை­ய­டுத்து பிற்­பகல் 12.30 மணிக்கு கட்சித் தலை­வர்கள் கூட்­டத்தை நடத்­து­வ­தற்கு தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.

இதன் போது 2020 ஆம் ஆண்டு ஜன­வரி 7 ஆம் திக­தி­யி­லி­ருந்து சபையின் நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட வேண்­டிய முறை­மைகள் குறித்து அவ­தானம் செலுத்­து­வ­தற்கு தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.ஜன­வரி மாதம் 3 ஆம் திகதி பிற்­பகல் 1 மணி முதல் மாலை 6 மணி வரை மீண்டும் பாரா­ளு­மன்ற அமர்வு கூட­வுள்­ளது. இதன்போது புதிய பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சபா­நா­யகர் முன்­னி­லையில் பத­வி­யேற்றுக் கொள்­ள­வுள்ளார்.

சபா­நா­யகர் கரு­ஜ­ய­சூ­ரிய பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சஜித் பிரே­ம­தா­ஸவை உத்­தி­யோ­க­பூர்­வ­மாக எதிர்க்­கட்சித் தலை­வ­ராக அறி­விக்­க­வுள்ளார். அத்­தோடு சிம்­மா­சன உரையின் அறி­விப்­புக்­களை ஒழுங்­கு­மு­றைப்­படி அறி­விப்­ப­தற்கும் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!