அக்கரைப்பற்றில் அமைதி ஊர்வலமும் காட்சிப்படுத்தலும்!

பன்மைத்துவத்தின் நன்மைகளை இலங்கை மக்கள் அனுபவிக்கவும், மற்றவர்களை சமமாக மதிப்பதற்குமான மனப்பாங்கு மக்களிடையே உருவாகவேண்டும் எனும் நோக்குடனும் ஏற்பாடு செய்யப்பட்ட விழிப்புணர்வு கருத்தரங்கும் ஊர்வலமும், சுவரொட்டிகளை காட்சிப்படுத்துகின்ற நிகழ்வும் இன்று அக்கரைப்பற்றில் இடம் பெற்றது.

அட்டாளைச்சேனை பிரதேச சர்வமதக்குழுவின் ஏற்பாட்டில் அட்டாளைச்சேனை பிரதேச செயலகம், அக்கரைப்பற்று பொலிஸ் நிலையம் அம்பாறை மாவட்ட இணையம் ஆகிய நிறுவனங்களின் ஒத்துழைப்போடு தேசிய சமாதான பேரவையின் பிரதம இணைப்பாளர் எம்.யு.உவைஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுகளில் அட்டாளைச்சேனை பிரதேச செயலகம், அக்கரைப்பற்று பொலிஸ் நிலையம் அம்பாறை மாவட்ட இணையம் ஆகிய அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் சர்வமத பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

சட்டத்தின் ஆட்சியை கொண்டு வருவதற்கும் பன்மைத்துவத்தை மதிப்பதற்கும் நடைமுறையில் உள்ள சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறும் கோரியே குறித்த நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டது.

அக்கரைப்பற்று சுவாட் மண்டபத்தில் இன்று காலை ஆரம்பமான விழிப்புணர்வு கருத்தரங்கில் நல்லிணக்கம் மற்றும் சமாதானத்தை வலியுறுத்திய பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

தொடர்ந்து அங்கிருந்து சாகாம பிரதான வீதியூடாக ஆரம்பமான சமாதான ஊர்வலம் அக்கரைப்பற்று மத்திய சந்தை மணிக்கூட்டு கோபுரத்தின் முன்பாக சென்றடைந்தது.

ஊர்வலத்தில் சென்றவர்கள் சகவாழ்விற்கு தடையாகவுள்ள கருத்துக்களை தோற்கடிப்போம், நிராகரிப்போம்’ எனும் வாசகம் அடங்கிய சுலோக துண்டுப்பிரசுரங்களை தாங்கி சென்றதுடன் சந்தைப்பகுதியில் மக்கள் பார்வைக்காக அவற்றை காட்சிப்படுத்தினர்.

இறுதியாக மணிக்கூட்டுக்கோபுரம் முன்பாக ஒன்று கூடிய அவர்கள் ஊடகங்களுக்கும் தமது கருத்துக்களை தெரிவித்தனர்.(சி)

Recommended For You

About the Author: Suhirthakumar

error: Content is protected !!