சிலியில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என்று போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர்.
சிலியில் கடந்த மாதம் 18ஆம் திகதி முதல் தொடர்ச்சியாக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்துடன், ஆயிரக்கணக்கானவர்கள் காயமடைந்துள்ளதுடன், பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், பொலிஸார் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கொடூரமான முறையில் தாக்குதல் நடாத்துவதாக வெளியான காணொளிகள் போலியானவை என சிலி அரசாங்கம் அறிவித்துள்ளது.
எனினும், தொடர்ச்சியாக போராட்டங்களை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர்.