கிளிநொச்சியில் அம்மாச்சி உணவக கட்டடம் இன்று திறக்கப்பட்டுள்ளது

கிளிநொச்சி இரணைமடு குளத்திற்கு அண்மையில் புதிய அம்மாச்சி உணவக கட்டடத்தை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று திறந்து வைத்தார்.

உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டிலும் வடக்கு மாகாண விவசாய அமைச்சின் நிதிப் பங்களிப்பிலும் 56 இலட்சத்து 68 ஆயிரம் ரூபா நிதியில் குறித்த கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண விவசாய திணைக்களத்தின் மகளிர் விவசாய விரிவாக்க அலகிற்காக குறித்த கட்டடம் புதிதாக நிர்மாணிக்கப்பட்டது.

இரணைமடு குளத்திற்கு முன்பாக அமைக்கப்பட்ட அம்மாச்சி உணவகத்தின் ஊடாக பாரம்பரிய மற்றம் இயற்கையான உணவுகளை உற்பத்தி செய்து குறைந்த விலையில் மக்களுக்கு வழங்குவதற்காகவும், சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நோக்குடனும் குறித்த பகுதியில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் வை.தவநாதன், கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ் சத்தியசீலன், கரைச்சி பிரதேச செயலாளர் ரி.முகுந்தன் விவசாய திணைக்கள மற்றும் நீர்ப்பாசன திணைக்கள உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!