வவுனியாவில் தமிழ் மாணவர்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டுள்ளன

வவுனியாவில் பெருபான்மை இனத்தை சேர்ந்தவர்களால் 100 தமிழ் மாணவர்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்வு வவுனியா குடியிருப்பு பிரதேச செயலக கலாசார மண்டபத்தில் நேற்று இடம்பெற்றது.

கம்பகா மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் சாந்த நீல் என்பவர், வன்னி மாவட்டத்தில் வறுமைக்கோட்டிற்குட்பட்ட 15 ஆயிரம் மாணவர்களுக்கு பல்வேறு உதவிகளை வழங்கும் திட்டத்தை முன்னெடுத்துள்ளார்.

அதன் முதற்கட்டமாக நேற்றைய தினம் வவுனியாவில் 100 மாணவர்களுக்கு புத்தகப்பை மற்றும் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இந் நிகழ்வில் வன்னி மக்கள் காப்பகத்தின் வவுனியா மாவட்ட இணைப்பாளர் சி.சுஜிகரன், வன்னி தேர்தல் மாவட்டத்தின் இணைப்பாளர் மஞ்சுல,வவுனியா மாவட்ட முதியோர் சமாசத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள், மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!