வெடிவிபத்து விமான உற்பத்தி தொழிற்சாலையில்

அமெரிக்காவின் கன்சாஸ் மாகாணத்தில் உள்ள விசிட்டா நகரில் அமைந்துள்ள விமான உற்பத்தி தொழிற்சாலையில் நைட்ரஜன் எரிவாயுக் குழாயில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட வெடிவிபத்து காரணமாக சுமார் 15 பேர் காயமடைந்தனர்.

அதில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர் .

ஒற்றை மற்றும் இரட்டை இன்ஜின் விமானங்களை தயாரிக்கும் டெக்ஸ்ட்ரான் ஏவியேஷனுக்கு சொந்தமான பீச் கிராஃப்ட்ஸ் தொழிற்சாலையில் குறித்த வெடிவிபத்து நிகழ்ந்துள்ளது.

விடுமுறை காலம் என்பதால் தொழிற்சாலை மூடப்பட்டதால் பெருமளவிலான விபத்து தவிர்க்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் நைட்ரஜன் எரிவாயுக் குழையில் ஏற்பட்ட சிதைவு தொடர்பாக முழுமையான விசாரணைக்குப் பின்னர் மட்டுமே தெரியவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால் ஏற்பட்ட எரிவாயு கசிவு காரணமாக அருகிலுள்ள பகுதிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என மேலும் தெரிவித்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!