முல்லைத்தீவு, துணுக்காயில் பாடசாலைகளுக்கு வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன

முல்லைத்தீவு மாவட்ட துணுக்காய் கல்வி வலய பாடசாலைகளுக்கு வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் கற்றல் உபகரணங்களும், பாடசாலை சீருடைத்துணிகளும் வழங்கப்பட்டுள்ளன.

கடந்த கால யுத்த நிலைமைகளினாலும் வேறு காரணங்களாலும் பாதிக்கப்பட்டு பெற்றோரை இழந்த மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய முல்லைத்தீவு மாவட்ட துணுக்காய் கல்வி வலய பாடசாலைகளான புத்துவெட்டுவான் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையைச் சேர்ந்த 21 மாணவர்களுக்கும் பழைய முறிகண்டி அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையைச் சேர்ந்த 10 மாணவர்களுக்கும் ஐயன்குளம் மகா வித்தியாலயத்தை சேர்ந்த 39 மாணவர்களுக்கும் உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

இதேவேளை, மாங்குளம் மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்தால் பெற்றோரை இழந்த மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த 10 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.

80 பாடசாலை மாணவர்களுக்கு 93 ஆயிரத்து 853 ரூபா பெறுமதியான கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்வில் ஓய்வுபெற்ற நீர் வழங்கல் சபை ஊழியர் கந்தப்பு கனகரத்தினம், வட்டு இந்து வாலிபர் சங்க தலைவர், சமூக சேவைகள் துறைப்பொறுப்பாளர், கல்வித்துறை பொறுப்பாளர், ஆலோசகர் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை வழங்கிவைத்தனர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!