தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில், சித்தியடைந்த மாணவர்களுக்கான புலமைப்பரிசில் நிதி ஒன்லைன்´ மூலமாகச் செலுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும் அடுத்த மாதத்தில் இருந்து அரசாங்க பாடசாலைகளுக்கும், பிரிவெனாக்களுக்கும், தனியார் மற்றும் அரச நிதியைப் பெற்றுக் கொள்ளும் பாடசாலைகளுக்கும் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான குறித்த நிதி வழங்கப்படவுள்ளது.
புலமைப்பரிசில் நிதியைப் பெற்றுக் கொள்வதற்கு இதுவரை காலமும் , மாதாந்தம் வவுச்சர் மூலம் விண்ணப்பிக்க வேண்டியிருந்தது. இதில் நிலவிய பிரச்சினைகள் மற்றும் தாமதங்களைக் கருத்திற்கொண்டு, குறித்த நடைமுறை முன்னெடுக்கப்பட்டுள்ளது என அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.