பலரது கவனத்தை ஈர்த்துள்ள கிளிநொச்சி இளைஞர்கள்!!

நாடு முழுவதும் பல மாவட்டங்களில் வர்ணம் பூசும் பணி நடைபெற்று வரும் நிலையில், கடந்த வாரம் கிளிநொச்சி சுயாதீன இளைஞர்களால் வர்ணமயமாகும் கிளிநொச்சி எனும் தொனிப் பொருளின் கீழ் வர்ணம் பூசும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.

வர்ணம் பூசும் நடவடிக்கை அரசியல் கட்சிகள், வர்த்தகர்கள், அமைப்புக்கள், தனிநபர்கள் எனப் பலரின் ஆதரவோடு வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் கிளிநொச்சியில் உள்ள இளைஞர்கள் தமக்கு கிடைக்கும் நேரங்களை பயன்படுத்தி பேருந்து தரிப்பிடங்கள், சுவர்கள், கட்டடங்கள் ஆகியவற்றில் ஓவியங்களை வரைந்து ஓவியங்களால் அழகாக்கி வருகின்றனர்.

இவ் ஓவியங்கள் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளதுடன் பலரும் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்களையும் ஆதரவையும் வழங்கி வருகின்றனர்.

தமக்கு கிடைக்கும் நேரங்களை பயன்படுத்தி இவ் வேலைத்திட்டத்தை செய்து வருவதாகவும், பலர் உதவிகளை செய்து வருவதாகவும் சுயாதீன இளைஞர் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

முதற்கட்டமாக நகரப்பகுதியில் உள்ள பேருந்து நிலையங்கள், சில வீதிக்கு அருகில் உள்ள கட்டடங்கள் மற்றும் சுவர்கள், மதில்கள் அடையாளப் படுத்தப்பட்டுள்ளதாகவும், அவற்றுக்கான அனுமதிகளையும் சட்டரீதியாக பெற்றுக்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

குறித்த பகுதிகளை முடித்த பின்னர் அடுத்த பகுதிகளை நோக்கி நகரவுள்ளதாகவும், தமது திட்டத்திற்கு அனைத்து அரசியல் தரப்பினர், வர்த்தகர்கள், அமைப்புக்கள். தனிநபர்கள் என பலரும் உதவுவது மகிழ்ச்சியாக உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!