ஜிம்பாப்வே விதிக்கப்பட்டிருந்த போட்டித் தடை கடந்த ஒக்டோபர் மாத்தில் நீக்கப்பட்டதை அடுத்து இலங்கையில்போட்டி நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என கிரிக்கெட் சபை உறுதி செய்துள்ளது.
“இலங்கை அணிக்கு இருக்கின்ற அடுத்த டெஸ்ட் தொடர் ஜிம்பாப்வே அணியுடன் நடைபெறுகின்ற டெஸ்ட் தொடராகும். இரண்டு டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட இந்தத் தொடர் ஜனவரி 16 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
ஐ.சி.சி மூலம் ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிக்கு விதிக்கப்பட்ட சர்வதேச போட்டித் தடைக்கு பின்னர் அந்நாட்டில் சர்வதேச கிரிக்கெட் போட்டி ஒன்று நடைபெறுகின்ற முதல் சந்தர்ப்பம் இதுவாகும்” என்று இலங்கை கிரிக்கெட் சபை வெளியிட்ட அறிவிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை அணி மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையே கடைசியாக இடம்பெற்ற 8 டெஸ்ட் போட்டிகளிலும் இலங்கை வெற்றிபெற்றிருப்பதோடு 2016 நவம்பர் மாதத்திற்கு பின்னர் இலங்கை அணி ஜிம்பாப்வேயுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் முதல் சந்தர்ப்பமாகவும் அமையும்.