முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி, உயர்தரப் பரீட்சையில் சாதனை

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவர்கள், உயர் தரப் பரீட்சையில், மாவட்ட மட்டத்தில் சாதனை படைத்துள்ளனர்.

இறுதி யுத்தத்தில் தந்தையை இழந்த நிலையில், வறுமைக்கோட்டின் கீழ் கல்வி கற்று, வணிகப்பிரிவில் இரவிச்சந்திரன் யாழினி முதலிடத்தை பெற்றுள்ளார்.

கலைப்பிரிவில் சுப்பிரமணியம் சுடர்நிலாவும், தொழில்நுட்ப பிரிவில் மகேந்திரன் அகத்கீதனும், பழைய பாடத்திட்டத்தில், தொழில்நுட்ப பிரிவில் வன்னியசிங்கம் தனுசனும், விஞ்ஞானத்துறையில் கண்ணதாஸ் லேஜியன் ஆகியோரும், மாவட்ட ரீதியில், 3 பாடங்களிலும் ஏ சித்தியை பெற்று மாவட்ட ரீதியாக முதலிடத்தை பெற்று, பாடசாலைக்கும் சமுகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!