மட்டக்களப்பு ஏறாவூரில், பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு, உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன

சீரற்ற காலநிலையினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உலருணவுப்பொதிகள் வழங்கும் விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் ஏறாவூர்ப் பிரதேசத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட 62 மீனவர்களுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வு பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றது.

பாம் அறக்கட்டளை நிதியம் இதற்கான நிதியுதவிகளை வழங்கியது.

மாவட்ட அரசாங்க அதிபர் எம். உதயகுமார் இந்நிகழ்வில் முதன்மை அதிதியாகக் கலந்துகொண்டார்.

பிரதேச செயலாளர் அல் அமீன் தலைமையில் நiபெற்ற இந்நிகழ்வில் பாம் நிறுவனத்தின் மாவட்ட இணைப்பாளர் ரமேஸ்ஆனந்தன், நிதியாளர் பிரியதர்ஸினி சந்திரலிங்கம், திட்ட அதிகாரி ஜே. ரன்ஜேத்குமார் மற்றும் ஸெட் நிறுவனத்தின் தலைவர் கே. அப்துல் வாஜித் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

அரசாங்க அதிபர் உதயகுமார் இங்கு கருத்துத் தெரிவிக்கையில் அண்மைக்கால வெள்ள அனர்த்தத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தின் சில பகுதிகள் வெகுவாகப்பாதிக்கப்பட்டன.

அதிக மழை வீழ்ச்சியினால் அனைத்துப்பகுதிகளிலும் வெள்ளம் ஏற்பட்டது.

இதேவேளை குளங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டதனால் ஏற்பட்ட நீர்ப்பெருக்கின் காரணமாக குறிப்பிட்ட சில பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியதுடன் மீனவர்களது வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டது.

மக்களுக்கான விழிப்புணர்வின்மையே இப்பாதிப்புக்கான காரணமாக கொள்ளப்படுகிறது என்று குறிப்பிட்டார்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!