அம்பாறை திருக்கோவில் வலயக் கல்வி அலுவலகத்திற்குட்பட்ட கோமாரி மெதடிஸ்த மிஸன் தமிழ் மகாவித்தியாலய மாணவி மோகராசா விதுசியா கலைத்துறையில் மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தினையும் தமிழ் மொழி மூலம் அகில இலங்கை ரீதியாக நான்காம் இடத்தினையும் பெற்று சாதனை படைததுள்ளார்.
இவர் பொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவில் வள்ளியம்மை வீதி கோமாரி 02 எனும் இடத்தில் மிகவும் வறுமையான குடும்பத்தில் பிறந்திருந்தாலும் தனது வீட்டின் வறுமையையும் பொருட்படுத்தாது கல்வி கற்பதே தனது இலக்காகக் கொண்டு கல்வி கற்று இப்பெறுபேற்றினை பெற்றுள்ளார்.
இதேவேளை கோமாரி மெதடிஸ்த மிஸன் தமிழ் மகாவித்தியாலயத்திற்கு முதலாவது வரலாற்று பெருமையை பெற்றுக் கொடுத்துள்ளதுடன் இவரின் இந்த சித்தியானது கோமாரி பிரதேசத்திற்கு பெருமையையும் ஏனைய மாணவர்களுக்கு மன எழுச்சியினையும் பெற்றுக் கொடுத்து இருப்பதாக பாடசாலை அதிபர் ரி.உதயகுமார் தெரிவித்தார்.