நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த, சிலர் திட்டமிட்டு பிரச்சினைகளை ஏற்பாடுத்துவார்கள் : வீ.ஆனந்தசங்கரி

தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபகஸவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இதன் போது, குறிப்பிட்ட ஒரு மொழியில் பாட வேண்டும் என வற்புறுத்துவது, எதிர்காலத்தில் விரும்பத்தகாத நிகழ்வுகளுக்கு வழிவகுக்கும் என வலியுறுத்தியுள்ளார்.

குளவிக் கூட்டிற்கு கல்லெறிவதைத் தடுக்கவும், தாங்கள் ஜனாதிபதியாக பதவி ஏற்றதன் பின் தங்களுக்கு நான் எழுதும் இரண்டாவது கடிதமாகும்.

பிரச்சினைகளுக்குரிய விடயங்களில் நான் எவ்வாறு செயற்பட்டு வந்துள்ளேன் என்பதை நீங்கள் அறிவீர்கள்.

விளைவுகளை பற்றி சிந்திக்காத சிலர் திட்டமிட்டு குழப்பி பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள்.

தேசிய கீதம் ஒவ்வொருவரும் தமது தாய் நாட்டைப் புகழ்ந்து பாடும் பாடலாகும்.

எவரையேனும் குழவிக் கூட்டிற்கு கல்லெறிய அனுமதிக்க வேண்டாம் என கேட்டுக் கொள்கின்றேன்.

மனச்சாட்சி உள்ள எவரேனும் இந்த விடயத்தில் தலையிட மாட்டார்கள்.

ஒவ்வொருவரும் தமக்குத் தெரிந்த மொழியில் தமது தாய் நாட்டை புகழ்ந்து பாடுவதையே விரும்புவார்கள்.

அது ஒரு மனிதனின் அடிப்படை உரிமையுமாகும்.

குறிப்பிட்ட ஒரு மொழியில் பாட வேண்டும் என வற்புறுத்துவது, எதிர்காலத்தில் விரும்பத்தகாத நிகழ்வுகளுக்கு வழிவகுக்கும்.

தமிழ் பேசும் மாணவர்கள் தமக்கு தெரிந்த மொழியில் மனப்பாடம் செய்து வைத்துள்ளார்கள்.

தங்களை சங்கடப்படுத்துவதற்காக இதனை எழுதவில்லை.

ஒரு முதிய அரசியல்வாதியின் நல்லாலோசனையாக ஏற்றுக் கொள்ளவும்.

என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!