வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலய மாணவன் பௌதீக துறையில், மாவட்ட மட்டத்தில் முதலிடம்

வறுமையிலும் சாதிக்க முடியும் என்பதை, உலகிற்கு வெளிக்காட்ட வேண்டும் என்ற எனது தன்னம்பிக்கையே, மாவட்ட மட்டத்தில் முதலிடத்தைப் பெற முடிந்தது என, வவுனியா மாவட்டத்தில் பௌதீக விஞ்ஞானதுறையில் முதலிடம் பெற்ற இராமகிருஸ்ணன் துலக்சன் தெரிவித்துள்ளார்.

வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலயத்தை சேர்ந்த இராமகிருஸணன் துலக்சன், 3ஏ சித்திகளைப் பெற்று மாவட்டத்தில் முதல் நிலை பெற்றுள்ளார்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட மாணவன்,
மாவட்டத்தில் முதலிடம் பெற்றமை மகிழ்ச்சியாக இருக்கின்றது.

எனது தந்தை கமத்தொழில் செய்து தான் என்னை கற்பித்தார்.

எனது குடும்பம் மிகவும் வறுமைக் கோட்டிற்குட்பட்டது.

நான் தினசரி 6 கிலோ மீற்றர் தூரம் துவிச்சக்கரவண்டியில் பயணித்து தான், எனது கல்வியை தொடர்ந்தேன்.

எனது குடும்பத்தின் நிலையை அறிந்த பாடசாலை ஆசிரியர்கள், என்னிடம் பாடசாலை சார்ந்த எவ்வித கட்டணங்களையும் அறவிடுவதில்லை.

அத்துடன் நான் ஒர் ஆசிரியர் வீட்டிலிருந்து தான் எனது கல்வியை தொடர்ந்தேன்.

தற்போது மகிழ்ச்சியாக இருக்கின்றது.

எனது பரீட்சை பெறுபேற்றை கேள்வியுற்றதுடன், எனது வீட்டில் நேற்றிரவு அனைவருமே உணவு உண்ணவில்லை.

அந்தளவிற்கு மிக சந்தோசத்தில் எனது வீட்டார் இருந்தனர்.

இரவு 12.00 மணி வரை நான் கல்வி கற்பேன்.

அவ்வாறு கல்வி கற்றதன் பிரதிபலிப்பே, பரீட்சை பெறுபேற்றை அடைந்துள்ளேன்.

எதிர்காலத்தில் பொறியலாளராக வருவதே எனது இலட்சியமாகும்.

இறுதியில் கண்ணீர் விட்டு அழுது வறுமையை ஒர் காரணமாக வைத்து, படிப்பை கைவிட வேண்டாம் என தெரிவித்ததுடன், தனக்கு கற்பித்த பாடசாலை ஆசிரியர்கள், தனியார் கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் தனது கல்விக்கு உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!