பெண் பணியாளர்களின் உரிமைகளை பாதுகாக்க கோரி, வவுனியாவில் பேரணி

வவுனியா வர்த்தக நிலையங்களில் பணி புரியும் பெண் பணியாளர்களின் உரிமைகளை பாதுகாக்க கோரிய விழிப்புணர்வு ஊர்வலம், வவுனியாவில் இன்று முன்னெடுக்கப்பட்டது.

கிராமிய பெண்கள் அமைப்பின் ஏற்பாட்டில், அதன் தலைவி பத்மநாதன் பிரியாவின் தலைமையில் பேரணி இடம்பெற்றது.

வவுனியா வாடிவீட்டில் ஆரம்பமான பேரணி, கடை வீதி வழியாக சென்று, பழைய பேருந்து நிலையத்தை அடைந்து, வவுனியா வர்த்தக சங்க கட்டடம் வரை சென்று நிறைவு பெற்றது.

இதன் போது, துண்டுப்பிரசுரங்கள் பொது மக்கள் மற்றும்
வரத்தக நிலையங்களுக்கு வழங்கி வைக்கப்பட்டதுடன், வர்த்தக சங்கம் மற்றும் வர்த்தக நலன்புரிச் சங்கத்திற்கு மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!