யாழ். ஏய்ட் நிறுவனத்தால், மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் அன்பளிப்பு

புத்தாண்டில் புதுப்பொலிவுடன் மாணவச் செல்வங்களை பாடசாலைக்கு அனுப்புவோம் செயற்திட்டத்தின் ஊடாக, யாழ். ஏய்ட் நிறுவனத்தால், பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளன.

மாவீரர்களின் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் மற்றும் பொருளாதாரத்தில் நலிவுற்ற குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு, உதவிகள் வழங்கப்பட்டன.

யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரியில், 1992 ஆம் ஆண்டு, கா.பொ.த. உயர் தரத்தில் கல்வி கற்ற மாணவர்கள் வரம்புயரக் குழுமத்துடன் இணைந்து, மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்;கும் திட்டத்திற்கு உதவியளித்துள்ளனர்.

அதனடிப்படையில், கைவேலி, வள்ளிபுனம், தேவிபுரம், மூங்கிலாறு, விசுவமடு ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு, 3 ஆயிரத்து 500 ரூபா பெறுமதியான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!