கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், நுவரெலியா ஹட்டன் ஹைலண்ஸ் கல்லூரி மாணவன், பௌதீக விஞ்ஞானப் பிரிவில் நுவரெலியா மாவட்டத்தில் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார்.
ஹட்டன் – டிக்கோயா பகுதியை வசிப்பிடமாக கொண்ட ராம் பிரசாத் என்ற மாணவன், 3ஏ சித்தியை பெற்றுள்ளார்.
இவர், சாதாரண தரப் பரீட்சை மற்றும் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையிலும் சிறந்த பெறுபேறுகளை பெற்று, பாடசாலைக்கு பெருமை சேர்த்திருந்தார்.
அத்துடன், ஹட்டன் ஹைலண்ஸ் கல்லூரி மாணவன், உயிரியல் விஞ்ஞான பிரிவில், மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார்.
ஹட்டன் நகர் பகுதியை வசிப்பிடமாக கொண்ட ஸ்ரீ மதுஸான் என்ற மாணவன் 3ஏ சித்தியை பெற்றுள்ளார்.
இதேவேளை, ஹட்டன் ஹைலண்ஸ் கல்லூரி மாணவி, நுண்கலை பிரிவில், மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தை பெற்றுள்ளார்.
தலவாக்கலை பகுதியை வசிப்பிடமாக கொண்ட ஆர்.கபிஸா என்ற மாணவி 3ஏ சித்தி பெற்றுள்ளார்.
தொழில்நுட்ப பிரிவில், வட்டவளை பகுதியை வசிப்பிடமாக எம்.மெரினா 3ஏ சித்திகளை பெற்று, மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார்.
இம்முறை, ஹட்டன் ஹைலண்ஸ் கல்லூரியில் இருந்து 130 மாணவர்கள் பல்கலைகழகத்திற்கு தெரிவாகியுள்ளமை சிறப்பம்சமாகும் என, கல்லூரி அதிபர் ஆர்.ஸ்ரீதர் தெரிவித்தார்.