யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரி மாணவன் விஜயகுமார் ராகவன், பொறியியல் தொழில்நுட்பப் பிரிவில் தேசிய ரீதியில் 4ஆம் இடத்தையும் யாழ்ப்பாண மாவட்டத்தில் முதலாம் இடத்தையும் பெற்றுச் சாதனை படைத்துள்ளார்.
கடந்த ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற க.பொ.த உயர்தரப் பரீட்சையில், பொறியியல் தொழில்நுட்பப் பிரிவில் தோற்றிய விஜயகுமார் ராகவன், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தில் “பி” சித்தியையும் பொறியியல் தொழில்நுட்பம், விஞ்ஞான தொழில்நுட்பம் ஆகிய இரு பாடங்களில் “ஏ” சித்தியை பெற்றுள்ளார்.
2.705 இசட் புள்ளிகளைப் பெற்றுள்ள ஜே.ராகவன் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் முதலாவது நிலையையும் தேசிய மட்டத்தில் 4ஆவது நிலையையும் பெற்று வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளார்.
ஜே.ராகவனுக்கு பாடசாலைச் சமூகம் பாராட்டுத் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.