வறுமையிலும், சாதித்த மாணவன் வவுனியாவில், கணித பிரிவில் முதலிடம்

பொறியியலாளராகி தனது கிராமத்திற்கும் பாடசாலைக்கும் உதவுவதே தனது இலட்சியம் என்று வவுனியாவில் கணிதப் பிரிவில் முதலிடம் பெற்ற மாணவன் இராமகிருஸ்ணன் துலக்சன் தெரிவித்துள்ளார்.

நான்கு சகோதரர்களுடன் 6 பேரை கொண்ட குடும்பத்தில் மூத்தவரான இ. துலக்சன் வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகாவித்தியாலத்தில் கல்வி கற்றுள்ளார்.

குறித்த மாணவன் வவனியாவின் பின்தங்கிய கிராமமான சாம்பல் தோட்டம் கிராமத்தில் இருந்து சிறந்த பெறுபேற்றை பெற்றுள்ளார்.

யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த அவர்கள் கொழும்பு மற்றும் கண்டி போன்ற பிரதேசங்களில் வாழ்ந்து மீண்டும் வவுனியாவிற்கு திரும்பி தனது கற்றல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.

விவசாயம் மற்றும் கூலித்தொழிலை செய்து வரும் தந்தை வீட்டுப்பணியாளரான தாய் என வறுமையின் மத்தியில் இம் மாணவன் பெற்றுக்கொண்ட பெறுபேறு வவுனியா மாவட்டத்திற்கு கிடைத்த சிறப்பு என கல்விச்சமூகம் தெரிவித்துள்ளது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!