பருத்தித்துறை பிரதேச சபையின் வாசிப்பு மாத பரிசளிப்பு நிகழ்வு இடம்பெற்றது

பருத்தித்துறை பிரதேச சபையின் 2019ஆம் ஆண்டுக்கான வாசிப்பு மாத பரிசளிப்பு விழா இன்று இடம்பெற்றது.

பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளர் ச.அரியகுமார் தலைமையில் இடம்பெற்ற பரிசளிப்பு வைபவத்தில், பிரதம விருந்தினராக
வடமராட்சி வலயக் கல்விப் பணிப்பாளர் யோ.இரவீந்திரன் கலந்துகொண்டார்.

இதன்பேது, பருத்தித்துறை பிரதேசசபை உறுப்பினர்கள், பிரதேசபை செயலாளர் ஸ்ரீபாஸ்கரன், பிரதேசசபை உத்தியோகத்தர்கள் வடமராட்சி வலயப் பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

வாசிப்பு மாத போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசில்களும் அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டன.

மேலும் விருந்தினர்களின் உரை தொடர்ந்து இடம்பெற்றது.

உரையாற்றிய வடமராட்சி வலயக் கல்விப் பணிப்பாளர் யோ.இரவீந்திரன் கல்வியில் நாம் பின்னடைவைச் சந்திப்பதற்கு, ஸ்மாட் தொலைபேசி பாவனை அதிகரிப்பதும் முக்கிய காரணமாக அமைவதாக கவலை வெளியிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!