அம்பாறை, அட்டாளைச்சேனையில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு வேலைத்திட்டம் முன்னெடுப்பு

அம்பாறை, அட்டாளைச்சேனை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய அதிகார எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் டெங்கு நோயை முற்றாக அழிக்கும் விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதனை அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் முன்னெடுத்துள்ளது.

இதற்கமைவாக, அட்டாளைச்சேனை பிரதேச செயலகம், அம்பாறை அனர்த்த முகாமைத்துவ நிலையம் என்பன இணைந்து பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் டெங்கு தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதன்போது டெங்கு நுளம்பு பெருகும் இடங்களைக் கொண்டுள்ள சூழலை வைத்திருந்த அதன் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தல்களும், எச்சரிக்கையும் வழங்கப்பட்டன.

இவ்வேலைத்திட்டத்தில், பிரதேச செயலக அதிகாரிகள், சுகாதாரத் துறையினர், பொலிஸ் உத்தியோகத்தர்கள், நுளம்பு தடுப்புப் பிரிவினர், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் என பலர் கலந்துகொண்டனர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!