அம்பாறையில், ‘சுவதம்’ விருது வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது

கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஊடாக கலைஞரின் இல்லம் தேடிச் சென்று கௌரவிக்கும் அரசின் திட்டத்தின் கீழ் திருக்கோவில் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவில் 08 கலைஞர்கள் ‘சுவதம்’ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளனர்.

இவ் விருது வழங்கும் நிகழ்வானது திருக்கோவில் பிரதேச செயலாளர் ரி.கஜேந்திரன் தலைமையில் கவிஞர் தம்பிலுவில் ஜெகாநாதன் இல்லத்தில் நேற்று நடைபெற்றது.

இந்நிகழ்வில் திருக்கோவில் பிரதேசத்தில் இருந்து கலைத்துறைக்கு பங்களிப்பு செய்து வரும் அண்ணாவிகள், கவிஞர்கள், சிறுகதை எழுத்தாளர்கள், பாடகர்கள், சிற்பக்கலைஞர்கள் என சிரேஸ்ட கலைஞர்கள் 08 பேர் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கான விருதுகள் திருக்கோவில் பிரதேச செயலகத்தினால் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

‘சுவதம்’ விருது வழங்கி வாழ்த்தும் நிகழ்வில் திருக்கோவில் பிரதேச செயலாளர் ரி.கஜேந்திரன், உதவிப் பிரதேச செயலாளர் கே.சதிசேகரன், கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி நிறோஜினி தவநீதன், அபிவிருத்தி உத்தியோகத்தர் கே.திருபரன் மற்றும் உத்தியோகத்தர்கள் கலைஞர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!