அம்பாறை திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட விநாயகபுரம் பாலக்குடா பாலவிநாயகர் பாடசாலையில் கல்வி கற்று வரும் சுமார் 100 மாணவர்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரனால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
இக்கற்றல் உபகரணங்கள் நாடாளுமன்ற உறுப்பினரின் சொந்த நிதியின் ஊடாக வறிய மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்யும் நோக்கில் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன், திருக்கோவில் பிரதேசசபை உறுப்பினர் கே.காந்தரூபன், நாடாளுமன்ற உறுப்பினரின் ஆலோசகரும் ஓய்வுநிலை ஆசிரியருமான ஜி.விநாயகமூர்த்தி, செயலாளர் ரி.சுரேந்திரன் மற்றும் பெற்றோர், மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.