மட்டக்களப்பு, காத்தான்குடியில் முத்தாரம் கலை கலாசார நிகழ்வு நடைபெற்றது

மட்டக்களப்பு காத்தான்குடியில் முத்தாரம் கலை கலாசார நிகழ்வு நேற்று இரவு நடைபெற்றது.

காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன கலை கலாசார பேரவையின் ஏற்பாட்டில் அஸ்ஹீட் அகமட் லெவ்வை ஞாபகார்த்த மண்டபத்தில் இக் கலை கலாசார நிகழ்வு நடைபெற்றது.

பேரவையின் தலைவர் மௌலவி எம்.எச்.எம்.புகாரி பலாஹியின் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் இதன் செயலாளர் முகைதீன் சாலி, உட்பட சம்மேளன முக்கியஸ்தர்கள் கலை இலக்கியவாதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது கவிதையும் கானமும் சிறப்பு நிகழ்ச்சி, பாடல்கள் கவிதைகள் என பல்வேறு கலை நிகழ்வுகள் நடைபெற்றதுடன் கவிஞரும் மூத்த கலை இலக்கியவாதியுமான ஓய்வு பெற்ற ஆசிரியர் ஏ.எல்.எம்.சித்தீக் கௌரவிக்கப்பட்டார்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!