மட்டக்களப்பு மண்முனைப்பற்று பிரதேச சபையினால் நேற்று கௌரவிப்பு வலுவூட்டல் விழா நடைபெற்றது.
ஆரையம்பதி நந்தகோபன் கலாசார மண்டபத்தில் மண்முனைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.மகேந்திரலிங்கம் தலைமையில் நடைபெற்றது.
இந்த விழாவில் மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் டி.பிரகாஸ், மண்முனைப்பற்று பிரதேச சபையின் உதவி தவிசாளர் எஸ்.சுந்தரலிங்கம், மண்முனைப்பற்று பிரதேச சபையின் செயலாளர் ஜே.சர்வேஸ்வரன், சபை உறுப்பினர்கள் அதிகாரிகள் முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதில் மண்முனைப்பற்று பிரதேச சபையினால் இப் பிரதேசத்தில் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
இப்பிரதேசத்திலுள்ள பாலர் பாடசாலைகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் கர்ப்பிணித் தாய்மாருக்கான போசாக்கு உணவுப் பொதிகள் முதியோருக்கான ஊக்குவிப்புக் கொடுப்பனவுகள் என்பனவும் வழங்கி வைக்கப்பட்டதோடு 2019ம் ஆண்டுக்கான கிறிஸ்மஸ் ஒளி விழாவும் நடைபெற்றது.