அம்பாறை கோமாரி பிரதேசத்தில் தெய்வீக கிராமம் எனும் தொனிப் பொருளில் இந்து சமய பாரம்பரிய சமய நிகழ்வுகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இந்துசமய கலாசார திணைக்களத்தின் அனுசரணையுடன் அம்பாறை மாவட்ட பொத்துவில் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் அறநெறிப் பாடசாலைகளின் பங்குபற்றுதலுடன் நிகழ்வுகள் நடைபெற்றன.
பொத்துவில் பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வே.ஜெகதீசன் கலந்து கொண்டார்.
தெய்வீக கிராம நிகழ்வின் ஆரம்ப நிகழ்வுகள் கோமாரி ஸ்ரீ முருகன் ஆலயத்தில் கோமாதா பூஜை, பூமி பூஜை மரநடுகை நடைபெற்று தொடர்ந்து அறநெறிப் பாடசாலை மாணவர்களின் யோகாசனப் பயிற்சிகள் நடைபெற்றன.
இதனைத் தொடர்ந்து ஸ்ரீ முருகன் ஆலயத்தில் இருந்து நந்திக் கொடிகளை ஏந்தியவாறு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இந்து எழுச்சி உரைகளுடன் பேரணியாக கோமாரி மெதடிஸ்த மிஸன் தமிழ் மகா வித்தியாலயம் வரை சென்றனர்.
அங்கு பாடசாலை ஒன்றுகூடல் மண்டபத்தில் கலை நிகழ்ச்சிகள் மற்றும் ஆன்மீக உரைகள் நடைபெற்றது.
பொத்துவில் பிரதேச செயலாளர் மற்றும் மேலதிக அரசாங்க அதிபர் ஆகியோர் இந்து ஆலயங்களின் தர்மகர்த்தாக்காளால் பொன்னாடைகள் போர்த்தி கௌரவிக்கப்பட்டதோடு அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கு ஒழுக்கக் கல்வி போதனை; நூல்களும் கையளிக்கப்பட்டது.
கோமாரி ஸ்ரீ முருகன் ஆலய முன்றலில் அன்னதான நிகழ்வுடன் நிறைவுற்றது.
இந்நிகழ்வுகளில் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வே.ஜெகதீசன் பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் மாவட்ட கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் கே.ஜெயராஜ் திருக்கோவில் பொத்துவில் பிரதேச செயலக கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இந்து ஆலயங்களின் பரிபாலன சபையினர் அறநெறிப் பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் இந்து அமைப்புக்களின் நிருவாகிகள் பெற்றோர்கள் பொது மக்கள் என பெரும் எண்ணிக்கையான இந்து மக்கள் கலந்து கொண்டனர்.