மட்டக்களப்பு மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகமும் கிழக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களமும் கலாசார அலுவல்கள் திணைக்களமும் இணைந்து நாடாத்திய கலாசார விழாவும் இலக்கிய விழாவும் நடைபெற்றது.
களுதாவளை கலாசார மண்டபத்தில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரெத்தினம் தலைமையில் நடைபெற்றது.
இவ்விழாவிற்கு சிறப்பு அதிதியாக மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை தவிசாளர் ஞா.யோகநாதன் உட்பட மேலும் பல அலுவலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
இதன் போது மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக பிரிவிலுள்ள மூத்த இளம் கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
அத்துடன் மண்முனை தென் எருவில் பற்று கலாசார பேரவையால் நடாத்தடப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.