மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள அல்பஜ்ர் நலன்புரி அமைப்பினால் தமிழ் முஸ்லிம் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது.
மஞ்சந்தொடுவாய் ஜின்னா வீதியிலுள்ள அல்பஜ்ர் காரியாலய மண்டபத்தில் அல்பஜ்ர் நலன்புரி அமைப்பின் தலைவர் எஸ்.ஏ.கே.பலீலுர்ரஹ்மான் தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.வாசுதேவன், காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கஸ்தூரியாராச்சி ஆகியோர் பிரதம விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
மஞ்சந்தொடுவாய் யுனானி ஆயர்வேத வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் எம்.எஸ்.ஜலால்தீன், காத்தான்குடி நகர சபை உறுப்பினர் சல்மா ஹம்சா, இப்றாகீம் பௌண்டேசன் எம்.ஐ.அமீர் ஹம்சா உட்பட முக்கியஸ்தர்கள், பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது தமிழ், முஸ்லிம் 125 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.