டெல்லியில் கடும் குளிர்; மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

டெல்லியில் கடும் குளிர் பதிவாகியுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் நவம்பர் முதல் பெப்ரவரி வரை குளிர் காலம் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இவ்வருடம் வழமைக்கு மாறாக குளிர் அதிகமாக காணப்படுவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

வரலாறு காணாத குளிரால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக 4 டிகிரி செல்சியஸுக்கும் குறைவான குளிர் நிலவி வந்த நிலையில் இன்று காலை 6.10 மணி நிலவரப்படி 2.4 டிகிரி செல்சியஸ் தட்பவெப்ப நிலை நிலவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறைந்த வெளிச்சம் காரணமாக சுமார் 100 மீட்டர் தூரத்தில் உள்ள பொருட்களைக் கூட காணமுடியவில்லை என மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் ரயில் போக்குவரத்து மற்றும் விமான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கடும் குளிர் எதிர்வரும் நான்கு நாட்களுக்கு மேல் நீடிக்கும் என்று வானிலை அவதான நிலையம் எச்சரித்துள்ளது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!