இறுதி யுத்தத்தின் பின்னர், எம்மால் கையளிக்கப்பட்ட உறவுகள், இன்று இல்லை என பதில் வழங்கப்பட்டால் அதனை ஏற்க முடியாது என முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தெரிவித்துள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கத்தினர் நேற்று நடாத்திய ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு குறிப்பிட்டனர்.