மட்டக்களப்பு கோட்டைமுனை விளையாட்டு கழகத்தினரின் ஏற்பட்டில் 13 வயதிற்குட்பட்டோருக்கான கடினப்பந்து கிரிக்கெட் போட்டி சிவானந்தா மைதானத்தில் நேற்று ஆரம்பமானது.
இந்நிகழ்வில் கோட்டைமுனை விளையாட்டு கிராமத்தின் தலைவர் இ.சிவநாதன், பொருளாளர் செ.ரஞ்சன் கோட்டைமுனை விளையாட்டு கழகத்தின் தலைவர் பே.சடாற்சரராஜா பொருளாளர் க.தயாசிங்கம் டான் தொலைக்காட்சியின் மட்டக்களப்பு அம்பாறை செய்தி முகாமையாளர் மோகன் மயூரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
முதல் போட்டியில் புனித மிக்கல் கல்லூரியும் மெதடிஸ்த மத்திய கல்லுரியும் மோதிக்கொண்டன.
தொடரின் இறுதிப்போட்டி நாளைய தினம் மாலை 3 மணிக்கு டான் செய்திகள் அலைவரிசையில் நேரலையாக ஒளிபரப்பாகும்.