ஜனாதிபதி கல்வியில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவார் : ஏ.எல்.எம்.பாரிஸ்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் காலத்தில் கண்டி மாவட்டத்தில் உள்ள அனைத்து முஸ்லிம் பாடசாலைகளும் அபிவிருத்தி செய்யப்படும் என்று கண்டி மாவட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முஸ்லிம் முன்னணியின் அமைப்பாளர் ஏ.எல்.எம்.பாரிஸ் தெரிவித்துள்ளார்.

தெல்தோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரியை ஆயிரம் பாடசாலை அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் உள்வாங்குவதற்காக பாடசாலை அபிவிருத்திச் சங்கக் குழுவினர்கள் கண்டி மாவட்;ட ஸ்ரீலங்கா பொதுஜன முஸ்லிம் முன்னணியின் அமைப்பாளரின் இல்லத்தில் இடம்பெற்ற சந்திப்பொன்றில் கலந்து கொண்டபோதே ஏ.எல்.எம்.பாரிஸ் இவ்வாறு கூறினார்.

ஆசியாவின் நம்பிக்கைக்குரிய ஒரு தலைவராக ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஸவை அனைவரும் ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.

அவருக்கு எதிராக வாக்களித்தவர்கள்கூட அவரின் வேலைத் திட்டங்களுக்கு அங்கீகாரமளித்துள்ளார்கள்.

அவரது காலத்தில் கண்டி மாவட்டத்திலுள்ள முஸ்லிம் பாடசாலைகள் அனைத்தும் அபிவிருத்தி செய்யப்படும்.

எதிர்வரும் காலங்களில் துரித கதியில் தெல்தோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரியை ஆயிரம் பாடசாலை அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் உள்வாங்குவதற்கான சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
என்று கூறினார்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!