மலையகத்தில் உள்ள வைத்தியசாலைகளில் நிலவும் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும் என்று சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்தின உறுதியளித்துள்ளார்.
சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்தனவை, நேற்றைய தினம் தேசிய மக்கள் பேரவையினர் சந்தித்து கலந்துரையாடியபோதே அமைச்சர் இவ்வாறு உறுதியளித்திருந்தார்.
இந்தச் சந்திப்பின்போது, முக்கியமாக பொகவந்தாலவ வைத்தியசாலையில் நிலவும் குறைபாடு மற்றும் மஸ்கெலியா வைத்திய சாலையில் நிலவும் குறைபாடுகள் தொடர்பில் பேசப்பட்டுள்ளது.
இச்சந்திப்பின்போது மலையகத்தில் உள்ள வைத்தியசாலைகளில் காணப்படும் குறைபாடுகளை அமைச்சரிடம் சுட்டிக்காட்டியதுடன் பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலையில் தொடரும் குறைபாடுகள் மற்றும் மஸ்கெலியா வைத்தியசாலையில் நிலவும் வைத்தியர் குறைபாடுகள் தொடர்பாகவும் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
குறைபாடுகளை கோட்டறிந்த அமைச்சர் ஒரு மாதகாலப்பகுதியில் உரிய தீர்வினை பெற்றுத்தருவதாக உறுதியளித்திருந்தார். (நி)