யாழ்ப்பாணம் கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவன் கே.நிலக்ஸன் கலைப் பிரிவில், தேசிய நிலையில் இரண்டாவது இடத்தைப் பெற்று
சாதனை படைத்துள்ளார்.
2019ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகள் நேற்று வெளியாகியிருந்தன.
இந்நிலையில், யாழ்ப்பாணம் கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவன் கே.நிலக்ஸன் 3ஏ சித்திகளைப் பெற்று, தேசிய நிலையில் 2ஆம் இடத்தையும் மாவட்ட நிலையில் முதலிடத்தையும் பெற்றுச் சாதனை படைத்துள்ளார்.
இம்முறை கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிகளை இணையத்தளத்தில் பரீட்சை சுட்டெண் மற்றும் தேசிய அடையாள அட்டை இலக்கம் ஆகியவற்றை பதிவு செய்தும் பார்வையிடும் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.