பின்தங்கிய பிரதேசமான யாழ்ப்பாணம் நெடுந்தீவு பிரதேச மாணவன், கல்விப் பொதுத் தராதர உயர்தரப்பரீட்சையில் கலைப் பிரிவில் சாதனை படைத்துள்ளார்.
நெடுந்தீவு மகாவித்தியாலயத்தில் கலைப் பிரிவில் கல்வி கற்ற, யேசுதாசன் கிறிஸ்துராஜன் எனும் மாணவன், கலைப்பிரிவில் 3ஏ சித்திகளைப் பெற்றுமாவட்ட நிலையில் 3ஆவது இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.
நேற்றைய தினம் வெளியாகிய கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையிலேயே, குறித்த மாணவன் சாதனை படைத்து, தீவக வலயத்திற்கு பெருமை சேர்ந்துள்ளார்.