எதிர்வரும் ஜனவரி மாத நடுப்பகுதியில் பல பொருட்களின் விலைகள் குறைக்கப்படும் என, நீர் வழங்கல் வசதிகள் இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
எஹெலியகோட பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
‘தற்போது தேயிலை, மிளகு, இலவங்கப்பட்டை, முந்திரி ஆகியவற்றின் விலை அதிகரித்து வருகின்றது.
இதனூடாக பொருட்களை உற்பத்தி செய்யும் மக்களின் வருமானத்தை அதிகரிக்க கூடியதாக இருக்கும்.
கடந்த ஆட்சி காலத்தில் நாட்டின் பொருளாதாரம் பாரிய சரிவை எதிர்கொண்டிருந்தது.
அதாவது எமது உற்பத்தி பொருட்களின் விலை மிகவும் வீழ்ச்சியடைந்து காணப்பட்டமையினால்தான், மக்களின் நுகர்வு பொருட்களுக்கு அப்போது விலை அதிகரிக்கப்பட்டது.
ஆனால் தற்போது நாம், எமது மக்களினால் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு விலையை அதிகரித்து, அதனூடாக அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்வடைய செய்யும் செயற்பாடுகளை முன்னெடுக்க ஆரம்பித்துள்ளோம்.
அந்தவகையில் ஜனவரி மாத நடுப்பகுதியில் பொருட்களின் விலை நிச்சயம் குறைக்கப்படும்’ என குறிப்பிட்டுள்ளார். (சி)